2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மின்கம்பத்துடன் மோதி விபத்து: ஒருவர் பலி

Gavitha   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

குருநாகல் மாவட்டம் கொக்கரல்ல பொலிஸ் பிரிவில், சனிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன்,  குருநாகல், கொக்கரல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் வாகனத்தை செலுத்திச் சென்ற மட்டக்களப்பு காத்தான்குடியை வசிப்பிடமாக கொண்ட ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் முன்னாள் உத்தியோகத்தரான முஹம்மத் பஷீர் (வயது 40) உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன், கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, வாகனத்தில் சென்ற  இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .