2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

யானைகளின் தாக்குதலில் 5 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் புதன்கிழமை (18) காட்டு யானைகளின் தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாவற்கொடிச்சேனைக் கிராமத்தில் மூன்று  வீடுகளும், காந்தி நகரில் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதில் மூன்று  வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உணவுப்பொருட்களும் உடைமைகளும் சேதமடைந்துள்ளன.

வவுணதீவு பிரதேச செயலகப் பிரதேசத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை, காந்திநகர், நொச்சண்டசேனை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தாம் தொடர்ச்சியான காட்டு யானைத் தாக்கத்துக்கு முகம் கொடுப்பதாகவும் இதனால் தமது அன்றாட விவசாய, மீன்பிடி, செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாகவும்; தெரிவிக்கின்றனர்.

தினசரி இரவு வேளைகளில் உயிர் அச்சத்துடன் நாட்களைக் கடத்த வேண்டியுள்ளதாகவும் இதனால், தமது வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .