2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி விவசாயி பலி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காஞ்சலம்குடாக் கிராமத்தில் உள்ள பிள்ளையாரடிச் சந்தியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

புலிபாய்ந்தகல் பாடசாலை வீதியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ்வரன் (வயது 58) என்பவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

இவரது மகனும் இவருமாகச் சேர்ந்து  மோட்டார் சைக்கிளில் வயலுக்கு திங்கட்கிழமை (18) மாலை  சென்றுகொண்டிருந்தனர். இவ்வேளையில்  பிள்ளையாரடிச் சந்தியில் நின்ற யானை ஒன்று இவர்களைத் துரத்தியுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் போட்டுவிட்டு தந்தையும் மகனும் வெவ்வேறு திசைகளில் தப்பியோட  முற்பட்டுள்ளனர். இதன்போது, தந்தையை குறித்த யானை துரத்தி தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

இதில் காயமடைந்த தந்தையை  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக இவரது மகன் கொண்டுசென்றபோது அவர் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .