Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 11 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இளையோரும் தேசிய விளையாட்டுகளில் பங்குபற்றி பிரகாசிக்க தற்போது அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு அரங்குத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடைபெற்றது. இவ்விழாவில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'விளையாட்டுக்கு மட்டுமல்ல, தேசிய நல்லிணக்கத்துக்கும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு எதிர்காலத்தில் இளையோரை ஒன்றிணைக்க பெருந்துணை புரியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விளையாட்டு வீரர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் விளையாட்டுத் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்காக எமது அமைச்சு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் மொத்த ஒதுக்கீட்டில் 36 சதவீத நிதியை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.
மேலும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக இந்த ஆண்டின் தேசிய விளையாட்டு விழாவை செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2ஆம் திகதிவரை வடமாகாணத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய விளையாட்டு நிகழ்வுகளை நாம் வடக்குக்கு கொண்டு செல்வதற்குக் காரணம் வருடக்கணக்காக விளையாட்டு மறக்கடிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளியுலகத்துக்கு கொண்டுவருவதற்கேயாகும். விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதிலும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இருக்க முடியாது.
விசேடமாக வடக்கு, கிழக்கில் கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய ஆற்றலுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் இருக்கிறார்கள். அவர்களது திறமைகளளையும் இன்னும் வேறுபல ஆற்றலுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளையும் நாம் வெளிக்கொண்டுவருவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
விளையாட்டின் மூலமும் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.' என்றார்.
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago