2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

விபத்தைக் கட்டுப்படுத்த இளைஞனின் முன்மாதிரி

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் குறுக்கறுப்போர், அவ்விடத்தில் விபத்துகள் இடம்பெற்று வருகின்றன.

போக்குவரத்துப் பொலிஸாருக்கு அஞ்சி, அவர்கள் அவசரமாகச் செல்வதால் பயணிகளும் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்ட அப்பிரதேச இளைஞன் ஒருவர், அவ்விடத்தில் தலைக்கவசம் ஒன்றை வைத்து, அது தொடர்பில் விளம்பரம் காட்சிப்படுத்தியுள்ளார்.

குறித்த வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் நபர்கள், அவ் இடத்தில் வைக்கப்பட்டுள்ள தலைக்கவசத்தை அணிந்து, விபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வேண்டியே இவ் ஏற்பாட்டைச் செய்துள்ளாதாக, குறித்த இளைஞன் தெரிவித்தார்.

“மோட்டார் சைக்கிள் பயணிகள் தங்களுடைய பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் தலைக்கவசத்தை குறித்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்வதால் அது இன்னொருவருக்கு உதவும்” எனத் தெரிவித்த அவ் இளைஞன், எதிர்காலத்தில் இன்னும் பல தலைக்கவசங்களை, அவசரத் தேவையாளர்களுக்காக அவ்விடத்தில் வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X