2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

விபத்தில் சிறுவன் பலி

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பிப்பிள்ளை தவக்குமார் நடராஜன் ஹரன்

மட்டக்களப்பு,  வெல்லாவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட தும்பங்கேணி - திக்கோடை பிரதான வீதியில் நேற்று (17 ) இரவு இடம்பெற்ற  விபத்தில் முருகேசு தனுஜன் எனும் 15 வயதையுடைய சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு சிறுவர்கள் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்,  வீதியில் நின்ற மாடுடன் மோதியதில், இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரையும், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளான் எனவும் மற்றைய 15 வயதையுடைய சிறுவன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான் எனவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை, வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .