Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 மே 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் நான்கு பேரையும் பொதுமன்னிப்பின் கீழ்; விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நியமனங்கள் வழங்குமாறு கோரி காந்தி பூங்காவுக்கு முன்பாக கடந்த 93 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் தங்களின் வாய்களை கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது, அமைதியான முறையில் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கூறி நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது.
இது தொடர்பில் தேரர் ஒருவர் உட்பட 4 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் திருகோணமலை பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றபோது, இவர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இவர்கள் நான்கு பேரையும் கருணை காட்டி விடுதலை செய்யுமாறும் கடந்த மாதம் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவுப்பத்திரம் கிழித்தெறியப்பட்டமைக்கும் அங்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்கும் தாம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago