2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வவுணதீவில் சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபான விற்பனை நிலையமொன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அம்மதுபான விற்பனை  நிலையத்தில் கடமையாற்றிவந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அம்மதுபான விற்பனை நிலையத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட மதுபானப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவுக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த மதுபான விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஊழல் குற்றவியல் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்களுடன் சந்தேக நபரை   வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .