2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எம்.ஏ.பரீத்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி நூறாணியா வீதியில் நேற்று திங்கட்கிழமை(05) இரவு முச்சக்கர வண்டியும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  5 வயது நிரம்பிய சித்னிசாதி என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து,குறித்த முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை,கிண்ணியா தம்பலகாமம் முனைச்சேனை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் மோதுண்டு முதியவர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோப்பூர் 59ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த சதக்கு லெப்பை நாகூர் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .