2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் பகுதியில் சனிக்கிழமை (12) மாலை வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒந்தாச்சிமடம் பகுதியைச்; சேர்ந்த ஜெகன் மகேந்திரன் (வயது 30) என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளானார்.

மேற்படி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, பொலிஸாருடன் விரைந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவருக்கு உடம்பின் பல பகுதிகளிலும்  வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .