2021 மார்ச் 06, சனிக்கிழமை

வீதியோர மேம்பாட்டு நிகழ்ச்சி

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
தொழில்சார் பயிலுநர் பயிற்சியை மேம்படுத்தும் வகையில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் தொழில்சார் பயிலுநர் பயிற்சி, திறன் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வீதியோர மேம்பாட்டு நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை செங்கலடி நகரில் முன்னெடுக்கப்பட்டது.
 
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சலீம் மௌலானா தலைமையில் இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டனர்.
 
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் தொழில் அற்ற இளைஞர், யுவதிகள்; தொழிலைப் பெறுவதற்கான தொழில்சார் பயிலுநர் பயிற்சியை எவ்வாறு பெற்றுக்கொள்வது, தொழில்சார் அனுபவமிக்க வல்லுனர்கள் தேசிய தொழில் தகைமை  சான்றிதழைப் எவ்வாறு பெற்றுக்கொள்வது, தெளிவுபடுத்தலுக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்;, பயிலுனர் பயிற்சி, தேசிய தொழில் தகைமை  ஆற்றல் முன்கற்கை அங்கிகரிப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறுதல் போன்றவை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .