2020 நவம்பர் 25, புதன்கிழமை

விபத்தில் அறுவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு புதுப்பாலத்தில் நேற்று (21) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 06 பேர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஏறாவூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர்  முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது, புதுப்பாலத்தடியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகி வாவிக்குள் விழுந்துள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் சாரதியும் வாவிக்குள் விழுந்துள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--