2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 4 பேர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிக் கடற்கரை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

02 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்துச் சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த எஸ்.மாஜிதா (வயது 40), எம்.இல்ஹாம் (வயது 17), எம்.உவைஸ் (வயது 17), எம்.ஐ.அஸ்னாத் (வயது 21) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 03 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .