2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வாய்க்காலினுள் வழுக்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் பள்ளியடி வீதியில்  வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அலியார் (வயது 49) என்பவர் திங்கட்கிழமை (07) வாய்க்கால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, கெக்கிராவைப் பகுதியில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுவந்த இவர், மரக்கறித் தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு, தொழுகையை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள வாய்க்கால் நீரில் கை, கால், முகம்; கழுவுவதற்காகச் சென்றார். இதன்போது,  வாய்க்கால் கரையில் கால் வைத்தபோது வழுக்கி வாய்க்காலினுள் விழுந்தார்.

இந்நிலையில், வாய்க்காலுக்குச் சென்ற இவரை  நீண்டநேரமாகக் காணாமையினால், இவரது நண்பர்கள் தேடினர். அப்போது அவரது கைப்பை நீரில் மிதந்ததுடன், இவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--