2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் தமது இரண்டு நாள் பகல் உணவையும்  மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை  நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை சிறைக்கூட உத்தியோகஸ்தர்கள் 135 பேர் தமது ஒரு நாள் சம்பளத்தையும் வெள்ள அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் தெரிவித்தனர்.

சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களிலும் தமக்கு வழங்கப்படும் பகல் உணவை வெள்ள அனர்த்தத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு கைதிகள்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்விரு தினங்களிலும்  இக்கைதிகளுக்கு பகல் உணவுக்காக  செலவு செய்யும் பணத்தை சிறைச்சாலை தலைமையகத்தின் ஊடாக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .