2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்டத்தின் 10 இடங்களில் நாளை எட்டரை மணி நேர மின் வெட்டு

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை உட்பட 10 இடங்களில் நாளை வியாழக்கிழமை எட்டரை மணி நேர மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் கல்லடி பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளமையினால் நாளை வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின் வெட்டு இடம்பெற்றவுள்ளது.

நாவலடி, கஜுவத்த, கிரிமிச்சை, பனிச்சங்கேணி, வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி மற்றும் வெருகல்  ஆகிய பிரதேசங்களிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .