2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள்'

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'விசேட தேவையுடையவர்களை சாதாரணமானவர்களைப்போல் மதிப்பதற்கு எமது மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள்' என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.ஏம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு நகரில் புதன்கிழமை (4) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'2014 ஆம் ஆண்டளவில் வீதிகள், வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் ஏற்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 6451 விசேட தேவையுடையவர்கள் உள்ளனர்.

இவர்கள் தங்களிற்கும் உரிமை மற்றும் சிறப்புரிமைகள் உண்டு என்பதை உணர்ந்து திறமை படைத்தவர்கள் சகாக்களுக்கு பயிற்சிகள் அளிக்கின்றனர்.

இவர்களின் திறமைகளுக்கு எடுத்துக்காட்டாக அண்மையில் இடம்பெற்ற பொதுநவவாய அரச தலைவர்கள் மாநாட்டின் கலை நிகழ்வுகளில் திறமைகளை வெளிக்காட்டினர்' எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .