Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன், சிஹாறா லத்திப்)
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 105 தம்பதிகளுக்கு இன்று திருமணப் பதிவு நடைபெற்றது. உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான 'எஸ்கோ' நோர்வே அகதிகள் பேரவையின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ள காலம் கடந்த விவாகப் பதிவு வேலைத் திட்டத்தின் கீழ் இத்திருமணப்பதிவு இன்று நடைபெற்றது.
பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக விவாகப் பதிவாளர் கே.திருமால் முன்னிலையில் இத்தம்பதியினருக்கு விவாகப் பதிவுகள் நடைபெற்றன.
பிரதேச செயலாளர் வீ.தவராசா, எஸ்கோ திட்ட இணைப்பாளர் எஸ்.உதயேந்திரன் மற்றும் நோர்வே அகதிகள் பேரவை திட்ட இணைப்பாளர் எம்.எம்.சுபைர் ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் குறித்த தம்பதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சமூகமளித்திருந்தனர்.



5 hours ago
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
15 Nov 2025