2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு மானியமாக ரூ.1,100 மில்லியன் பெறுமதியான உரம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் போக நெற்செய்கைக்காக 1,100 மில்லியன் ரூபா பெறுமதியான உரம் மானியமாக வழங்கப்பட்டுவருவதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.

இம்முறை இம்மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டதில் 42,500 குடும்பங்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளன. இக்குடும்பங்கள் இதன் மூலம் பெரும் நன்மையடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--