2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

சவூதிக்குச் சென்ற தாய் திரும்பவில்லையென 14 வயது மகன் தற்கொலை முயற்சி

Menaka Mookandi   / 2014 ஜூலை 04 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற தாயார் மீண்டும் வீடு திரும்பாமையால் மன உளைச்சலுக்கு உள்ளான 14 வயது மகன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கிண்ணையடி, வாழைச்சேனையைச் சேர்ந்த இச்சிறுவன், வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டுப்பணிப்பெண்;ணாக சவூதி அரேபியாவுக்கு சென்ற தாயாரை வீட்டிற்கு மீண்டும் வருமாறு தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளும் போது கேட்டுள்ளார். தாயாரும் வருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

தனது தாய் இன்று வருவார் நாளை வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்து மணமுடைந்த நிலையிலேயே இச்சிறுவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்பு தேடிச் செல்வோர்கள் தங்களது பிள்ளைகளின் வயது வேறுபாடு, அவர்களது உளநலம் மற்றும் குடும்ப பின்னணிகள், பிள்ளைகளின் பாதுகபப்பு என பல்வேறுபட்ட விடயங்களில் கவனம் செலுத்தும்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக  நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .