Super User / 2011 ஜூன் 16 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் நீண்ட நாட்களாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படும் குழுவொன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 துவிச்சக்கரவண்டிகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தெரிவித்தார்.
இவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் வனராஜாவின் உத்தரவின்பேரில் மட்டக்களப்பு, மாமாங்கம், கொக்குவில், அமிர்தகழி, காத்தான்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026