2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் ரூ. 16,708 மில்லியன் செலவில் அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த  ஆண்டு 16,708 மில்லியன் ரூபாய் செலவில் 3,727 அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின்  அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.


இத்திட்டங்களில் இதுவரையில் 89 வீதமான அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன்,  பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு 62 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


வெளிநாட்டு உதவி நிறுவனங்களுடாக 15 ஆயிரம் மில்லியனும் அமைச்சுக்களினூடாக 803 மில்லியனும் கிழக்கு மாகாணசபையினால் 378 மில்லியனும் கமநகும திட்டத்தின் கீழ் 158 மில்லியனும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் 30 மில்லியனும் இந்;த ஆண்டின் அபிவிருத்திப் பணிக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--