2020 நவம்பர் 25, புதன்கிழமை

யுத்தம் மற்றும் வண்செயல்களினால் பாதிக்கப்பட்ட 172 பேருக்கு நஷ்ட ஈட்டு

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

கடந்த கால யுத்தம் மற்றும் வண்செயல்களினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 172 பேருக்கு 14 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டுப் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு அதிகார சபையினால் வழங்கப்பட்ட இந்நஷ்ட ஈட்டுக் கொடுப்பணவை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர வழங்கிவைத்தார்.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சி.யோகேஸ்பரன், புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் பதுர்தீன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த யுத்தம் மற்றும் வண்செயல்களினால் உயிரிழந்த 33 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும், சொத்துக்களை இழந்த பொதுமக்கள் 90 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும், சொத்துக்களை இழந்த அரசாங்க உத்தியோகத்தர்கள்  44 பேருக்கு தலா  ஒன்றரை இலட்சம் ரூபா வீதமும், அரசியல் வன்முறை நட்ட ஈட்டுக் கொடுப்பனவு 5 பேருக்கு தலா ஜந்து இலட்சம் ரூபாவும் இதன் போது வழங்கப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .