2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக 18ஆவது பட்டமளிப்பு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை(5) வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

மூன்று தொகுதிகளாக இடம்பெற்ற இந்த  18ஆவது பட்டமளிப்பு விழாவில் 754 பேர் பட்டம் பெற்றதுடன், உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவினால், பட்டங்கள் வழங்கப்பட்டன.

முதலாவது அமர்வில் 207 பேருக்குப் பட்டமளிக்கப்பட்டதுடன், இரண்டாவது அமர்வில் 243 பேருக்கும், முன்றாவது அமர்வில்  304 பேருக்கும் என 754 மாணவர்களுக்குப் பட்டமளிப்பு இடம்பெற்றுள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நான்கு மாணவர்களுக்கு தங்க விருதுகளும் மேலும் பத்து மாணவர்களுக்கு பொற்கிளி விருதுகளும் வழங்கப்பட்டன.  

இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .