Menaka Mookandi / 2011 ஜூன் 20 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மற்றும் கொக்கடிச்சோலை வாவியை இணைக்கும் நீர்வழி படகு பாதை போக்குவரத்துச்சேவை இன்று முதல் அதிகாலை 4.30 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்புச்செயலாளர் கே.ரவீந்திரன் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டலில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இலவசமாக நடத்தப்பட்டுவரும் இப்படகுப்பாதைச் சேவை யுத்த காலங்களில் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் காலை 6 மணிமுதல் மாலை 8 மணிவரை மாத்திரமே இந்நீர்வழியூடான படகுபாதை சேவை இடம்பெற்றுவந்தது.
தற்போதைய அமைதிச்சூழலில் இச்சேவையின் நேரத்தை நீடிக்குமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வீதி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர் எம்.கருணை நாதனிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இச்சேவை இன்றுமுதல் அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 10 மணிவரையான சுமார் 18 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரின் இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.
18 minute ago
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
04 Jan 2026
04 Jan 2026