2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

20 கோடி ரூபாய் பெறுமதியான விதை நெல் ஐக்கிய நாடுகள் சபையினால் விநியோகம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான விதைநெல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.

இவ்விதை நெல் வழங்கும் வைபவம் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டாக்டர் ருஷாங்கள் தலைமையில் கொக்கொட்டிச்சோலை விவசாய பணிமனையில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமான யு.என்.டி.பி.யின் நிதியுதவியின் கீழ், மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் புசல் விதை நெல் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இவ்விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில், யு.என்.டி.பி மாவட்ட அதிகாரி கே.முரளீதரன் கொக்கொட்டிச்சோலை கமநல அதிகாரி எம்.ஐ.எம் பாயிஸ் உட்பட விவசாய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--