Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
செங்கலடி கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக செல்லும் பொதுமக்கள், பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இங்கு கடமையாற்றிய பெண் பற்சிகிச்சை வைத்தியர், பிரசவ விடுமுறையில் சென்றமையால் நான்கு மாதத்திற்கு முன்னர் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பற்சிகிச்சை வைத்தியர் ஒரு வாரத்தில் இரு தடவைகள் அதாவது புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் கடமைக்காக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் குறிப்பிட்ட தினங்களில் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலம் வரையே சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இந்நிலையிலும் நாளாந்தம் 60 நோயாளர்கள் பற்சிகிச்சைக்காக இவ்வைத்தியசாலைக்கு வருகின்றனர்.
இதில் அனேகமானோர் சிகிச்சை பெறாமலே செல்கின்றனர். இதேவேளை இவ்வைத்தியசாலையில் சாதாரன மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதில் சிறுவர்களுக்குரிய மருந்து வகைகள் நீண்ட காலமாக வெளியில் வாங்க துண்டு கொடுக்கும் நடைமுறையே இங்கு காணப்படுகின்றது.
இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற பதுளை வீதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களே அதிகம் வருகின்றனர். இவர்களது நலன் கருதி இக்குறைகள் தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025