2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவு கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் 9ஆம் ஆண்டு மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவர் வவுணத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இவரைக் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியர் மூன்று மாணவிகளை வௌ;வேறு சந்தர்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைக் குறித்து அதிபர் ஆசிரியர்களுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினர்.

பின்பு பெற்றோர், வவுணத்தீவுப் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த ஆசிரியர், வவுணத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து ஆஜர்ப்படுத்தினார்.  குறித்த சந்தேக நபரை இருபத்தைந்தாயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதிக்கு வழக்கை நீதிவான் ஒத்திவைத்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவிகளில் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.

 


  Comments - 0

  • D W K David Thursday, 19 August 2010 08:55 PM

    கடுமையான தண்டனை தேவை . அல்லது புலிகளின் வெற்றிடம் உணரப்படும்.
    வசந்த kUMAR

    Reply : 0       0

    junaideen-pottuvil Friday, 20 August 2010 07:12 PM

    இந்த காமுகனை கட்டி வைத்து கல் எறிந்து கொல்லவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .