Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனக் காரியாலயத்தில் நடைபெற்றது.
யுத்தத்திற்கு பின்னரான தற்போதய நிலை மற்றும் காணிப்பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகள் பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதி நிதிகளிடம் இச்சந்திப்பின் போது கேட்டறிந்து கொண்டனர்.
சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி, அதன் வெளிக்கள இணைப்பாளர் டினின் முறான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவார் இஸ்மாயில், சம்மேளன செயலாளர் சபீல் உட்பட அதன் உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
.jpg)
25 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
14 Nov 2025