2026 ஜனவரி 14, புதன்கிழமை

விமலுக்கு வலை: பிடியாணை பிறப்பிப்பு

Editorial   / 2026 ஜனவரி 14 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட வீரவன்ச, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து இந்த  பிடியாணை  பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல்  நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன் விசாரணைக்கு புதன்கிழமை (14)  அன்று வந்தது, மேலும் பிரதிவாதியின் பிணையாளர்களை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .