2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்டு செஞ்சிலுவை சங்க வளாகத்தில் வாரத்தில் ஒருநாள் சேவை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு  அலுவலகம் மூடப்பட்டுள்ள போதிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி அலி நறாக்கி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் குடும்ப உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான செலவு மற்றும் போக்குவரத்து வசதிகளை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்காகவே இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--