2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அரியநேந்திரனின் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களங்களுக்கு அறிவிப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  பெண்கள், சிறுவர்கள் உட்பட 765 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் சம்பந்தமான நடிவக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனின் கடிதம் கிடைத்தமை தொடர்பாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இம்மாதம் 18 ஆம் திகதி தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பாகவும் தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாக பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

பெண்கள், சிறுவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கடந்த மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்குரிய பதில் கடிதம் இம்மாதம் 12 ஆம் திகதி கிடைத்திருந்தது. அதன் பின்னர் நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இம்மாதம் 18 ஆம் திகதி கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--