Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஜுவத்தையில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படை முகாம் அமைக்கப் பயன்படுத்துவது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்கப்பட்டுள்ளது
கஜுவத்தை விடயம் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜூன் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கு இந்த முகாம் அமைப்பினை நிறுத்த வேண்டும் அத்துடன் அதனை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டும் அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்தே, மாவட்ட அரச அதிபரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் படி ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜூலை மாதம் 20 ஆம்திகதி மீள்குடியேற்ற அமைச்சுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்தா மொருகொல, மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு இராணுவ முகாம் விவகாரம் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025