2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

துப்பாக்கி பறிப்பு குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு இலட்சம் சன்மானம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு புகையிரத நிலயத்துக்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் துப்பாக்கி மற்றும் 30 ரவைகள் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் களவாடப்பட்ட துப்பாக்கி தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு இத்தொகை சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பினை பெறும் முகமாக மட்டக்களப்பு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குறித்த சன்மானம் தொடர்பான விபரங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .