2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வளமுள்ள காணியை மத்திய அரசு எடுப்பதை தடுத்து நிறுத்துங்கள்:மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ், ஆர்.அனுருத்தன்)

கிழக்கு மாகாணத்துக்குரிய எமது வளமுள்ள காணியை மத்திய அரசு எடுப்பதைத் தடுத்து நிறுத்தி இக்காணியை எமது பிரதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவதோடு இதற்குரிய கோடிக்கணக்கான வருமானத்தையும் மாகாணசபை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

மேலும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறக்கண்டியிலிருந்து புடவைகட்டு வரையுமுள்ள கடற்கரைப் பிரதேசத்துக்கு அண்மித்த காணி கிழக்கு மாகாணசபைக்குரியது. 525 ஏக்கருடைய இக்காணிணை மத்தியரசின் கீழ் கொண்டு வருவதற்கு உல்லாசப் பிரயாண அபிவிருத்தி அதிகாரசபையூடாக முயற்சிகள் நடந்து வருகிறது என சிலரின் ஊடாக தெரியவருகிறது.

இது கிழக்கு மாகாணசபையின் அனுமதியுடன் நடைபெறகின்றது என்றால் நாம் இதை அனுமதிக்க முடியாது. இந்த முறையில் காணி வழங்குவது எமது பிரதேச முதலீட்டாளர்களைப் பாதிப்பதோடு எமது வளமுள்ள காணியை பறிப்பதற்கு உடந்தையாகவும் இருப்பதற்கு சமமானதாகும். கடந்த காலத்தில் இதேபோல் முன்னோரால் திருகோணமலை மாவட்டத்தில் கப்பல்த் துறையிலிருந்து பாலன்போட்ட ஆறு வரையுமுள்ள காணிகளும், 174 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடாவில் 350 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இருந்து கடந்த வருடம் 40 இலட்சம் ரூபாய் வருமானமாக மாகாணசபைக்கு கிடைத்ததையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, கிழக்கு மாகாணசபைக்குரிய எமது வளமுள்ள காணியை மத்திய அரசு எடுப்பதைத் தடுத்து நிறுத்தி இக்காணியை எமது பிரதேச முதலீட்டாளர்களக்கு வழங்குவதோடு இதற்குரிய கோடிக்கணக்கான வருமானத்தையும் மாகாணசபை பெறுவதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X