2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மாநகர சபை உறுப்பினரை காணவில்லை என மனைவி புகார்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(எல்.தேவ்)

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.

காளிகோயில் வீதி புன்னைச்சோலையைச் சேர்ந்த சகாயமணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்துவிட்டு மற்றொரு மாநகர சபை உறுப்பினரையும் சந்தித்து உரையாடிவிட்டு அங்கிருந்து இரவு 7 மணிக்கு தனது வீடு நோக்கிப் புறப்பட்ட இவர் இன்னமும் வீடு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X