Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிஹாறா லத்தீப்)
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் பன்குடாபுலைய வெளிப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய சந்தைப்படுத்தல் மற்றும் பயிற்சி நிலையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய கட்டிடத் தொகுதியொன்று சுமார் 21 இலட்சம் ரூபாய் செலவில் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இப்புதிய நிலையத்தினூடாக இப்பிரதேச மக்களின் உள்ளூர் உற்பத்திகளை இலகுவாக விற்பனை செய்யவும் தேவையான பயிற்சிகளை கற்றுக் கொள்ளவும் இந்நிலையம் வழி செய்வதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்புதிய சந்தைப்படுத்தல் கட்டடத்தை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்தார். மீள் எழுச்சித்திட்ட மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.குன்றக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திருமதி ருத்திரமலர், ஞானபாஸ்கரன், இணைப்பதிகாரி பொன்னுத்துரை ரவீந்திரன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உரையாற்றுகையில், மட்டக்களப்பில் பின்தங்கிய படுவான்கரைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கடந்த காலங்களில் யுத்த சூழலால் பெரும் தியாகங்களை செய்து பொருளாதாரத்தை இழந்த மக்களுக்கு விமோசனம் வழங்க நாம் கூடிய அக்கறை காட்டி வருகின்றோம்.
அரசுக்கு கடந்த தேர்தல்க் காலங்களில் எமது தமிழ் மக்கள் முழு ஆதரவு வழங்காதபோதிலும், ஜனாதிபதியின் பெருந்தன்மையால் கிழக்கின் ஒரேயொரு அரசாங்கக் கட்சிப் பிரதிநிதியாக செயல்பட்ட எமது தமிழ்மக்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல கூடிய முயற்சி எடுத்து வருகின்றேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago