Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
தேசிய கைதிகள் தினத்தை எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை பிரதான நலன்புரி அதிகாரி ஆர்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சிறைக்கைதிகள் வாரம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி கே.கருணாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வாரத்தில் ஏழு நாட்களும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 5ஆம் திகதி கொடி தினமும், 6ஆம் திகதி சுகாதார தினமும், 7ஆம் திகதி சட்ட உதவி தினமும், 8ஆம் திகதி கல்வி தினமும், 9ஆம் திகதி தொழிழ்பயிற்சி தினமும் 10ஆம் திகதி விளையாட்டு தினமும், 11ஆம் திகதி சிரமதானமும், 12ஆம் திகதி சர்வமத தினமுமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago