2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு விதவைகளுக்கு சுயதொழில் உதவித்திட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விதவைகளுக்கான விசேட மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விதவைகளுக்கான சுயதொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை வழங்க இந்தியா முதற் கட்டமாக 250 மில்லியன் ரூபா நிதியை வழங்கவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகங்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 43 ஆயிரம் விதவைகளும் வடக்கில் 40 ஆயிரம் விதவைகளும் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்ததாக தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டததில் மட்டும் 25 ஆயிரம் விதவைகள் இருப்பதால்தான் விதவைகளுக்கான விசேட மீள் எழுச்சி திட்டத்தை முதலாவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விதவைகளுக்கு சுய தொழில் தொடர்பான பயிற்சி மற்றும் ஆடை உற்பத்தி கால்நடை வளர்ப்பு விவசாயம் உட்பட ஏழு சுய தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.

இதற்காக 50 பேர் பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு இந்தியாவிற்கு சென்று பயிற்சி பெறவுள்ளனர். அவர்கள் பயிற்சி முடித்த பின்பு முதற்கட்டத்தில் தெரிவு செய்யப்படும் 800 விதவைகளுக்கு சுயதொழில் தொடர்பான பயிற்சியை வழங்கவுள்ளனர்.

ஒரு விதவைக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் சுய தொழில் வாய்ப்புகளை வழங்க 03 இலட்சம் முதல் 05 இலட்சம் வரை வழங்க செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில  குழநதைகளையும் உடைய இனம் தாய் மார்களே உள்ளடக்கப்படுவார்கள்

இந்தியாவில் உள்ள சேவா இந்தியா என்ற விதவைகளுக்கான சுய தொழில் வழங்கும் நிறுவனமும் இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சு இணைந்து அமுல்  படுத்த்ப்னாலும் மாகாணசபையின் பங்களிப்பும் இதில் மாகாணசபையின் பங்களிப்பும் இதில் அடங்கும் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--