2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஆரயம்பதியில் ஏற்பாடான ஆர்ப்பாட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் ரத்து

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, ஆரயம்பதியில் இன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த கதவடைப்பும் பேரணியும் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து இடம்பெறவில்லை.

ஆரயம்பதி பொது அமைப்புக்கள் என்று குறிப்பிடப்பட்டு, அனாமோதய துண்டுப்பிரசுரம் மூலம் மாபெரும் கதவடைப்பும் பேரணியும் வீட்டுத்திட்டத்தினை நிறுத்துவோம் என்று தலைப்பிடப்பட்டு நேற்று வெளியாகிய துண்டுப் பிரசுரத்தின் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

துண்டுப்பிரசுரத்தில் ஆரயம்பதி எல்லைக்குள் அமையவிருக்கும் முஸ்லிம்மக்களை புதிதாக குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டத்தினை நிறுத்தும்படி வலியுறுத்துவதற்காக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  

இதனையடுத்து, வியாழக்கிழமை மாலை ஆரயம்பதி பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆகிய காங்கேயன்னோடையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எ.எ.எம்.மதீன் மற்றும் பாலமுனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எ.எம்.முபாறக் ஆகியோர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்தனர்.

இன்று திட்டமிடப்பட்டிருந்த கடையடைப்பு மற்றும் எதிர்ப்புப் பேரணியும் இனமுரண்பாட்டை ஏற்படுத்துவதோடு சமூகங்களிடையே இன ஐக்கியத்தை சீர்குலைப்பதோடு பதற்ற நிலையையும் ஏற்படுத்தும் என தெரிவித்து, இதனை தடுக்குமாறு முறைப்பாடு செய்ததனை அடுத்து பொலிஸார் சம்பந்தப்பட்ட அமைப்பினரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது தமக்கும் இந்த துண்டுப்பிரசுரத்துடன் எதுவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X