2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அஞ்சல் விளையாட்டு விழாவின் தீச்சுடர் பவனி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

உலக அஞ்சல் தினத்தையொட்டி அஞ்சல் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள தேசிய அஞ்சல் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றிய தீச்சுடர் பவனி இன்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை பாணமையிலிருந்து  பவனி ஆரம்பமானது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.ரட்ணசிங்கம் தலைமையில் இடம்பெற்று வரும் இத்தீச்சுடர் பவனியில் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள தபால் நிலையத்தில் கடமையாற்றும்
ஊழியர்கள் பங்கு கொண்டு தீச்சுடரையும் தபால் அஞ்சல் பொதியினையும் ஏந்தி இதில் பங்கு கொண்டுள்ளனர்.

இத்தீச்சடர் பவனி அநுராதபுரம் வரை செல்லவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .