2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மானிய விலையில் விற்கப்படவேண்டிய உரமூடைகள் வர்த்தக நிலையத்திலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )
 
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலைய கட்டிடமொன்றில் சட்ட விரோதமான முறையில் மறைத்து வைக்கப்படடி்ருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி உரமூடைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
 
மஹிந்த சிந்தனை திட்டத்தின கீழ் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரமூடைகள், குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்படடி்ருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அந்த இடத்தை முற்றுகையிட்ட போதே இன்று காலை இவை கண்டு பிடிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸார் இந்த இடத்தை முற்றுகையிட்ட போது வர்த்தக நிலையத்தின் முன் பக்கம் மூடப்பட்ட நிலையில் பின் பக்கம் திறந்திருந்ததாகவும், லொறியொன்று சில உரமூடைகளுடனும் சில உபகரணங்களுடனும் அதற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் லொறி சாரதி உட்பட சிலர் பொலிஸாரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, உர வியாபாரத்துடன் தொடர்புடைய வர்த்தகர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .