Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜவ்பர்கான்)
கடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பி.சகாயமணியை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் விஜய குணவர்த்தனவிடம் இன்று திங்கட்கிழமை நண்பகல் கோரியுள்ளார்.
அவரைச் சந்தித்தபோதே மேயர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
பிரதி பொலிஸ்மா அதிபரின் மட்டக்களப்பு பணிமனையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை மாநகரசபை உறுப்பினர்கள் கடத்தப்பட்ட மாநாரசபை உறுப்பினரின் மனைவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்ந்து புலனாய்வு செய்துவருவதாகவும் பொதுமக்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இலகுவாக கண்டுபிடிக்கமுடியுமெனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
(படப்பிடிப்பு: றிபாயா நூர்)

46 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago