Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
இலங்கையிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிற்குக் கடத்தப்பட்ட வெருகல் ஸ்ரீ சித்தரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்குரிய பஞ்சலோகத்தினாலான முருகன் சிலையை மீண்டும் எடுத்து அங்கிருந்து எடுத்து வர ஆலய பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர்.
2006 - 2007ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை மற்றும் வெருகல் பிரதேச மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த சூழ்நிலையிலேயே குறித்த முருகன் சிலை ஆலயத்திலிருந்து காணாமல் போனது. 2008ஆம் ஆண்டு இந்தச் சிலை நாமக்கல் மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட நிலையில் தமிழக பொலிஸாரால் பாதுகாப்பாக தற்போது வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலைக்கு உரிமை கோருபவர்கள் உரிய ஆதாரங்களை நேரில் சமர்ப்பிப்பதன் மூலம் இதனை பெற்றுக் கொள்ள முடியும் என தற்போது தமிழகப் பொலிசார் அறிவித்ததையடுத்தே அதனை மீளப் பெற்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் எஸ்.சிதம்பரப்பிள்ளை தெரிவித்தார்.
"2008ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இச் சிலை கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து அதனை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு கடிதம் எழுதிய போதிலும் அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை" என்றும் இது தொடர்பாக தெரிவித்த ஆலய பரிபாலன சபைத் தலைவர் மீண்டும் தமிழக முதலமைச்சருக்கு இதனை மீளப் பெறுவது தொடர்பாக கடிதமொன்றை அனுப்பி வைக்கவிருப்பதாகவும் அதன் பின்னர் உரிய ஆவணங்களுடன் தமிழகம் சென்று சிலையை மீளப் பெற்று வர விருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
53 minute ago
2 hours ago
4 hours ago
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
4 hours ago
15 Oct 2025