Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவ்பர்கான்)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புனரமைப்பு செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உபதலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான இக்குழுவில் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.
வடகிழக்கில் முழுமையாக புனரமைப்புச் செய்யப்பட்ட பின் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைத்து சபைகளையும் சுதந்திர கட்சி கைப்பற்றும் எனவும் அவர் கூறினார்.
நேற்று மாலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago