Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தற்சயலாக இடம்பெற்ற விபத்தே தவிர, எந்தவித நாசகார செயலுமல்ல மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார் .
கரடியனாற்றுச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருபவர்களை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துடுப்பாட்டவீரரும் ஆகிய சனத்ஜயசூரியா சகிதம் சென்றபோது அங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல, பெரும்பாலான பகுதிகளில் பொலிஸ்நிலைய வெடிச்சம்பவமானது மக்கள்மத்தியில் அச்சத்தையும் பீதியினையும் ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் அங்கு இடம்பெற்றது அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மலை உடைப்பதற்கான டைமமெற் வெடிமருந்து தற்செயலாக வெடித்துள்ளது. இது குறித்து பலரும் பலவாறு பேசிவருவதனால் மக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இங்கு எந்தவித நாசகார செயலும் ஏற்படவில்லை. கடந்த 30 வருடங்களாக போரினால் பல துன்பங்களை அனுபவித்து வந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற ஒரு காலகட்டத்தில் இவ்வாறான ஒரு துன்பகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எமது நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறுவதற்கு எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் இடம் பெறமாட்டாது எனவே மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவத்த அவர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடுப்பதினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago