Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
இலங்கையிலுள்ள யுனாணி வைத்தியத்துறையை அபிவிருத்தி செய்ய சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது என சுதேசவைத்தியத்துறை அமைச்சார் பியசேன கமகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்தே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் யுனாணி வைத்தியத்துறையினை விருத்தி செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலை இலங்கையின் முதலாவது யுனானி வைத்தியசாலையாக உருவாக்கப்பட்டுள்ளது.
யுனாணி மற்றும் சித்தம் ஆயுர்வேதம் ஆகியவை சுதேச வைத்திய முறைகளுடன் ஹோமியோபதி பஞ்சகாமம் ஆகிய வைத்திய முறைகளும் அபிவிருத்தி செய்யப்படும்.
வடக்கில் சித்த வைத்தியத் துறையை அபிவிருத்தி செய்ய 106 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆயுர்வேத வைத்தியசாலைக்குத் தேவையான வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இதன் அபிவிருத்திக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்வேன் என அமைச்சார் பியசேன கமகே தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு அமைச்சர் பியசேன கமகே விஜயம் செய்தார்.
இந்நிகழ்வில் அமைச்சார் பியசேன கமகேயுடன் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025