Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வட கிழக்கிலிருந்து 18 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகியுள்ளனர் என்று ஈரோஸ் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் ஈரோஸ் பிரபா குறிப்பட்டார்.
மட்டக்களப்பு, ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பபின்போது அவர் இக்கருத்துகளை முன்வைத்தார்.
இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர், "எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை கலாசாரம் கல்வி உட்பட வாழ்வாதாரத்திலும் பின்னோக்கியுள்ளது.
அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக் கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது. அதனால்தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவருகிறது.
அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்ல எமக்கு அரசியல் இரண்டாம் கட்டம்தான் தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பபட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு கௌரவமான காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும்.
அதற்காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம். எதிர்காலத்திலும் தேர்தல்களைச் சந்திக்க தயாராகவுள்ளோம். நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்று மாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத் தீர்வாகயிருந்தாலும் அது தமிழ் பேசும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago