2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி. கிழக்கு முதல்வருக்கு புகழாரம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி முதல்வர் சந்திரகாந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் அவரது இல்லத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி பல சேவைகளைப் புரிந்து வருவதாகவும் மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்நது தமது ஆதரவு த.ம.வி.புலிகள் கட்சிக்கு இருப்பதாகக் கூறிய அவர், மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருப்பதாகவும் அதற்கு த.ம.வி.பு கட்சியுடனான உறவு வலுச்சேர்க்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--