Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான முதிரை மரக்குற்றிகளையும், பலகைகளையும் காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இரு சந்தேக நபர்களையும் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்தன தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி பிரதான வீதியால் இரு சிறிய உழவு இயந்திரங்களில் இம்மரக்குற்றிகள் கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அவை கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரு ட்ரக்டர்களிலுமிருந்து சுமார் 300 முதிரை மரக்கட்டிகளும், பலகைகளும் மீட்கப்பபட்டுள்ளன. இதன் பெறுமதி 3 இலட்சம் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மரக்குற்றிகள் சகிதம் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
25 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
4 hours ago